எதிர்வரும் ஒக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ள 2021 ஐ.சி.சி. ஆண்கள் டி-20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட அணியை மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.
இந்த அணியில் 2016 டி-20 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டியின் இறுதி ஓவரில் பென் ஸ்டோக்ஸின் ஓவருக்கு தொடர்ச்சியாக நான்கு சிக்ஸர்களை விளாசி, கிண்ணத்தை அணிக்காக பெற்றுக் கொடுத்த பிராத்வைட் இடம்பெறவில்லை.
இருப்பினும், 36 வயதான ராம்பல் ஆறு வருடங்களுக்குப் பிறகு முதல் முறையாக மேற்கிந்திய தீவுகள் டி-20 அணிக்கு திரும்பியுள்ளார்.
அணியில் இணைத்துக் கொள்ளப்பட்ட மற்றொரு குறிப்பிடத்தக்க வீரர் ரோஸ்டன் சேஸ் ஆவர்.
முதல் முறையாக மேற்கிந்தியத்தீவுகள் தேசிய அணிக்கு டி-20 அழைப்பினை பெற்றுள்ள அவர், கரீபியன் பிரீமியர் லீக்கில் அனைவரதும் கவனத்தையும் ஈர்த்தார்.
மேற்கிந்தியத்தீவுகள் அணி
கீரான் பொல்லார்ட் (தலைவர்), நிக்கோலஸ் பூரன் (உப தலைவர்), ஃபேபியன் ஆலன், டுவைன் பிராவோ, ரோஸ்டன் சேஸ், ஆண்ட்ரே பிளெட்சர், கிறிஸ் கெய்ல், ஷிம்ரான் ஹெட்மியர், எவின் லூயிஸ், ஓபேட் மெக்காய், லென்டல் சிம்மன்ஸ், ரவி ராம்பல், ஆண்ட்ரே ரசல், ஓஷேன் தாமஸ் மற்றும் ஹேடன் வால்ஷ்.
மேலதிக வீரர்கள்
டேரன் பிராவோ, ஷெல்டன் கோட்ரெல், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹொசைன்