நாளை விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய விநாயகர் 108 போற்றியை கீழே பார்க்கலாம். சிறப்பு மிக்க இத்துதியை மூன்று வேளைகளிலும் (காலை, மதியம், மாலை) சொல்பவர்களுக்கு நினைத்த காரியங்கள் கைகூடும்.
விநாயகர் சதுர்த்தி அன்று சொல்ல வேண்டிய 108 போற்றி
ஓம் விநாயகனே போற்றி
ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி
ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி
ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி
ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி
ஓம் ஆனை முகத்தோனே போற்றி
ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் ஆனந்த உருவே போற்றி
ஓம் இமவான் சந்ததியே போற்றி
ஓம் இடரைக் களைவோனே போற்றி
ஓம் ஈசன் மகனே போற்றி
ஓம் ஈகை உருவே போற்றி
ஓம் உண்மை வடிவே போற்றி
ஓம் உலக நாயகனே போற்றி
ஓம் ஊறும் களிப்பே போற்றி
ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி
ஓம் எளியவனே போற்றி
ஓம் எந்தையே போற்றி
ஓம் எங்குமிருப்பவனே போற்றி
ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி
ஓம் ஏழை பங்காளனே போற்றி
ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி
ஓம் ஐயனே போற்றி
ஓம் ஐங்கரனே போற்றி
ஓம் ஒப்பிலாதவனே போற்றி
ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி
ஓம் ஒளிமய உருவே போற்றி
ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி
ஓம் கருணாகரனே போற்றி
ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி
ஓம் கணேசனே போற்றி
ஓம் கணநாயகனே போற்றி
ஓம் கண்ணிற்படுபவனே போற்றி
ஓம் கலியுக நாதனே போற்றி
ஓம் கற்பகத்தருவே போற்றி
ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி
ஓம் கிருபாநிதியே போற்றி
ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி
ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி
ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி
ஓம் குணநிதியே போற்றி
ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி
ஓம் கூவிட வருவோய் போற்றி
ஓம் கூத்தன் மகனே போற்றி
ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி
ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி
ஓம் கோனே போற்றி
ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி
ஓம் சடுதியில் வருபவனே போற்றி
ஓம் சங்கரன் புதல்வனே போற்றி
ஓம் சங்கடஹரனே போற்றி
ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி
ஓம் சிறிய கண்ணோனே போற்றி
ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி
ஓம் சுருதிப் பொருளே போற்றி
ஓம் சுந்தரவடிவே போற்றி
ஓம் ஞாலம் காப்பவனே போற்றி
ஓம் ஞான முதல்வனே போற்றி
ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி
ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி
ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி
ஓம் துயர் துடைப்பவனே போற்றி
ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி
ஓம் தேவாதி தேவனே போற்றி
ஓம் தொந்தி விநாயகனே போற்றி
ஓம் தொழுவோ நாயகனே போற்றி
ஓம் தோணியே போற்றி
ஓம் தோன்றலே போற்றி
ஓம் நம்பியே போற்றி
ஓம் நாதனே போற்றி
ஓம் நீறணிந்தவனே போற்றி
ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி
ஓம் பழத்தை வென்றவனே போற்றி
ஓம் பாரதம் எழுதியவனே போற்றி
ஓம் பரம்பொருளே போற்றி
ஓம் பரிபூரணனே போற்றி
ஓம் பிரணவமே போற்றி
ஓம் பிரம்மசாரியே போற்றி
ஓம் பிள்ளையாரே போற்றி
ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி
ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி
ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி
ஓம் புதுமை வடிவே போற்றி
ஓம் புண்ணியனே போற்றி
ஓம் பெரியவனே போற்றி
ஓம் பெரிய உடலோனே போற்றி
ஓம் பேரருளாளனே போற்றி
ஓம் பேதம் அறுப்போனே போற்றி
ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி
ஓம் மகிமையளிப்பவனே போற்றி
ஓம் மகாகணபதியே போற்றி
ஓம் மகேசுவரனே போற்றி
ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி
ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி
ஓம் முறக்காதோனே போற்றி
ஓம் முழுமுதற்கடவுளே போற்றி
ஓம் முக்கணன் மகனே போற்றி
ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி
ஓம் மூத்தோனே போற்றி
ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி
ஓம் வல்லப கணபதியே போற்றி
ஓம் வரம்தரு நாயகனே போற்றி
ஓம் விக்னேஸ்வரனே போற்றி
ஓம் வியாஸன் சேவகனே போற்றி
ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி
ஓம் வெற்றியளிப்பவனே போற்றி.