நாட்டில் கோவிட் தொற்று தீவிரமடைந்த நிலையில் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி அமுலான தனிமைப்படுத்தல் ஊரடங்கானது தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு இறுதியாக எதிர்வரும் 13ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து எதிர்வரும் 13ஆம் திகதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்பது தொடர்பான அறிவிப்பு நாளைய தினம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கோவிட் தடுப்புக்கான செயலணி ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் கூடி இது குறித்து தீர்மானம் எடுத்துவரும் நிலையிலேயே நாளைய தினம் ஊரடங்கு தொடர்பான தீர்மானம் எட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த காலங்களில் கோவிட் மரணங்களின் நாளாந்த எண்ணிக்கை 200ஐ தாண்டி பதிவாகி வந்த நிலையில், கடந்த சில தினங்களாக அந்த எண்ணிக்கை 185 வரை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.