தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட3 பெண்கள்: அதிரடியாக முறியடித்த பொலிசார்
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தான் இந்த தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதாக பொலிசார் தற்போது தெரிவித்துள்ளனர்.
பாரீஸில் உள்ள Notre Dame என்ற பகுதியில் அனாதையாக நின்றுருந்த கார் ஒன்றை பொலிசார் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்துள்ளனர்.
அதில், எரிவாயு சிலிண்டர்கள் வைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொலிசார் அதனை உடனடியாக அப்புறப்படுத்தினர்.
இவ்விவகாரம் தொடர்பாக பொலிசார் விசாரணையை தொடங்கியபோது நேற்று முன் தினம் 3 பெண்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது நடவடிக்கைக்கு பின்னர் நேற்று பொலிசார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், பாரீஸில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 3 பெண்களும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும், ஒரு பெண்ணின் கைப்பையில் கடிதம் ஒன்றையும் பறிமுதல் செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடிதத்தில் ‘பாரீஸில் தாக்குதல் நடத்த கைது செய்யப்பட்ட 3 பெண்களுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது’ தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மேலும், சில தினங்களுக்கு முன்னர் பொலிசாரை தாக்க முயன்றபோது சுட்டு கொல்லப்பட்ட வாலிபரும் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
பாரீஸ் நகரில் பயங்கர தாக்குதலை பொலிசார் முறியடித்துள்ளதால் பெரும் உயிரிழப்புகள் அதிர்ஷ்டவசமாக தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.