2009இல் – முள்ளிவாய்க்கால் போரில் சிறிலங்காவின் படைகளும் – விடுதலைப் புலிகளும் குற்றவாளிகளே’ என்னும் ஐ.நா. ஆய்வாளர் அறிக்கையை ஏற்றுக்கொண்டு மனித உரிமை ஆணையாளருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக அல்லது அனுப்ப இருப்பதாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி கவலையளிப்பதாக ஈழத் தமிழர் நட்புறவு மையத்தின் தலைவர் கவிஞர் காசி ஆனந்தன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐ.நா மனித உரிமை ஆணையத்தின் 46/1 தர்மானம் குறித்து எதிர்வரும் செப்டம்பர் மாதக் கூட்டத் தொடரில் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அவர்களின் வாய்மூல அறிக்கை வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில், மனித உரிமை ஆணையாளருக்குத் தமிழ் மக்கள் தேசிய முன்னணிக் கட்சியின் தலைவர் திரு. சி.வி.விக்னேஸ்வரன் தமிழீழ விடுதலை இயக்கத் தலைவர் திரு.செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் திரு. சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சித் தலைவர் திரு. என். சிறீகாந்தா ஆகியோர் தமிழீழத்தின் தற்போதைய நிலை குறித்துக் காட்டமான ஒரு கடிதத்தை எழுதியிருக்கிறார்கள்.அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன்.
ஆனால் – ‘2009இல் – முள்ளிவாய்க்கால் போரில் சிறிலங்காவின் படைகளும் – விடுதலைப் புலிகளும் குற்றவாளிகளே’ என்னும் ஐ.நா. ஆய்வாளர் அறிக்கையை ஏற்றுக் கொண்டு மனித உரிமை ஆணையாளருக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு கடிதம் அனுப்பியுள்ளதாக அல்லது அனுப்ப இருப்பதாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி கவலையளிப்பதாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள முழுமையான விபரம் பின்வருமாறு,