இங்கு திருமணம் நடத்துவதற்காகவும், ஆன்மிக சொற்பொழிவு பயன்படும் வகையில் ஒரு விசாலமான மண்டபம் உள்ளது. இந்த கோவில் ராஜகோபுரத்தில் கந்த புராண காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
மூலவர் : வடபழநி ஆண்டவர்
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
தல விருட்சம் : அவதும்பரவிருக்ஷம் (அத்திமரம்)
தீர்த்தம் : குகபுஷ்கரணி (திருக்குளம்)
ஆகமம்/பூஜை : காமிகாகமம் (சிவாகமம்)
அமைந்த இடம் : வடபழநி, சென்னை, தமிழ்நாடு
கோவில் வரலாறு
1890-ம் ஆண்டு மிகவும் எளிய ஓலைக்கூரைக் கொட்டகையுடன் இந்த கோவில் கட்டப்பட்டது. பின்னர் மக்களின் அதிக வருகையாலும், ஆதரவாலும் கோவில் புகழ் பெற்றது. ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரம் தம்பதியர் இந்த ஆலயத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். இந்த கோவில் அண்ணாசாமி நாயக்கர் எனும் முருக பக்தர் தனது சொந்த வழிபாட்டிற்காக கொட்டகையுடன் இந்த கோவில் அமைத்தார் எனவும். அங்கு பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியின் வண்ணப்படத்தை வைத்து வழிபட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் ஒரு சமயம் கடுமையான வயிறு வலியால் அவதிப்பட்டார். அவரின் நோய் தீர வேண்டி அடிக்கடி திருத்தணி மற்றும் திருப்போரூர் முருகன் ஆலயத்திற்கு சென்று வந்தார். ஒரு முறை தென் பழநி யாத்திரை சென்ற போது அங்கு ஒரு சாது சொல்லியபடி, அண்ணாசாமி தங்கியிருந்த கொட்டகையில் பழநி முருகன் உருவ படம் வைத்து வழிபடலானார்.
தன்னுடைய நாக்கை அறுத்து முருகனுக்கு காணிக்கையாக்கினார். இதற்கு “பாவாடம்” என்று பெயர். இதனால் அவருடைய வயிற்றுவலி நீங்கியது. நாளடைவில் அவர் முருகப்பெருமானின் தெய்வீக சக்தியை உணரத் தொடங்கினார். அதன் பின் அவர் சொல்லக்கூடிய “அருள்வாக்கு” பலருக்கும் உண்மையாக நடப்பதாக கூறினர். அதனால் மக்கள் தங்களின் அன்றாட பிரச்னை தீர அண்ணாசாமி நாயக்கரிடம் அருள்வாக்கு பெற்றனர்.
தனிச் சன்னதிகள்
இந்த கோவிலில் பல தெய்வங்களுக்குரிய தனிச் சன்னதிகள் உள்ளன. இங்கு வரசித்தி விநாயர், சொக்கநாதர் சிவன், மீனாட்சி அம்மன், காளி, பைரவர், மற்றும் வள்ளி, தேவசேனா சமேத சண்முகர் சன்னதிகள், தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகாலட்சுமி என பல சன்னதிகள் இங்கு உள்ளன. இந்த ஆலயத்தின் மூலவராக பழநி முருகன் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார். முருகப்பெருமானின் காலில் பாதரட்சைகளுடன் காட்சியளிக்கிறார்.
இங்கு திருமணம் நடத்துவதற்காகவும், ஆன்மிக சொற்பொழிவு பயன்படும் வகையில் ஒரு விசாலமான மண்டபம் உள்ளது. இந்த கோவில் ராஜகோபுரத்தில் கந்த புராண காட்சிகள் விளக்கும் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
கோவிலின் சிறப்பு
பல முருகன் கோவில்களில் இல்லாத ஆஞ்சநேயர் சன்னதி இங்கு உண்டு. தென்பழநி கோவிலுக்குச் செய்வதாக வேண்டிக்கொண்ட காணிக்கைகளை இக்கோவிலில் செலுத்துவதும் உண்டு.
வழிபாடு
கோவில் தினமும் அதிகாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது. 7 மணிக்கு காலசந்தி பூஜை, 12 மணிக்கு உச்சிகால பூஜை நடக்கும். 5 மணிக்கு சாயரட்சை, 9அர்த்தசாம பூஜை நடைபெறுவது வழக்கம்.