ஐ.நா அமைதிகாக்கும் உச்சிமாநாடு அடுத்த வருடம் கனடாவில்
ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் உச்சிமாநாடு அடுத்த வருடம் கனடாவில் நடைபெறவுள்ளதாக கனேடிய பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜ்ஜன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று (வியாழக்கிழமை) தகவல் வெளியிட்டுள்ள சஜ்ஜன், ‘ஆதரவு, சமாதானத்தை ஊக்குவித்தல் ஆகியவற்றில் ஒரு பகுதியாக கனடாவும் இருக்க வேண்டும். அதற்காக அடுத்த ஆண்டு பாகாப்பு அமைச்சு கூட்டம் கனடாவில் நடைபெறவுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். உலகம் முழுவதும் இருந்து பாதுகாப்பு அமைச்சர்கள் ஐ.நா அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்கால அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்காக 150 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 600 துருப்புக்களை கனடா அனுப்பும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திய அமைச்சர், பெண்கள் மற்றும் ஆண்கள் என எமது இராணுவத்தினர் நன்கு பயிற்சி பெற்றுவருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், யுத்தம் இடம்பெறும் பகுதிகளில் நிர்கதியாகியுள்ள பொதுமக்களை பாதுகாப்பதில் பங்களிப்பு வழக்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.