இந்திய காஷ்மீர் அரசியல்வாதியும், பிரிவினைவாதத் தாலைவருமான சையத் அலி ஷா கிலானி ஸ்ரீநகரில் காலமானார்.
உயிரிழக்கும்போது அவருக்கு வயது 91.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அரசியலில் இருந்து விலகிய கிலானி, ஸ்ரீநகரின் முக்கிய பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.
அவர் அனைத்து கட்சிகள் ஹூரியத் மாநாட்டின் ஒரு கடுமையான பிரிவுக்கு தலைமை தாங்கினார். இது இந்திய ஆட்சியை நிராகரிக்கும் மற்றும் காஷ்மீரை பாகிஸ்தானுடன் இணைக்க கோரும் பிரிவினைவாத கூட்டணி.
பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து இந்தியாவுடனான எந்தவொரு உரையாடலையும் அவர் நீண்ட காலமாக நிராகரித்து வந்தார்.
காஷ்மீருக்கு சிறப்பு உரிமை அளிக்கும் 370 ஆவது பிரிவு, 2019 ஆகஸ்ட் 5 இரத்து செய்யப்பட்ட பின்னர் கிலானி உடல்நலக்குறைவு காரணமாக அவரது வீட்டில் காவலில் வைக்கப்பட்டார்.
அவரது குடும்பத்தினர் வயதான அரசியல்வாதி கிலானி, பல ஆண்டுகளாக உடல் நலக் குறைவுடன் இருந்ததாகவும், கடந்த 12 ஆண்டுகளாக பல இந்திய எதிர்ப்பு போராட்டங்களை நடத்திய பின்னர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதாகவும் கூறினார்.
கிலானிக்கு பாகிஸ்தான் அரசு அந்நாட்டின் உயரிய குடிமைக் கெளரவ விருதான ‘நிஷான் – எ- பாகிஸ்தான்’ விருதை கடந்த ஆண்டு அளித்து அளித்து கெளரவித்தது.
அவரது மரணம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களில், ஸ்ரீநகர் மற்றும் பிற முக்கிய நகரங்களில் இராணுவத்தினரும் பொலிஸாரும் நிறுத்தப்பட்டுள்ளனர், எந்த வாகன போக்குவரத்தும் அனுமதிக்கப்படவில்லை. இப்பகுதி முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், தொலைபேசி, இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.