நாட்டில் உணவுத் தட்டுப்பாடு இல்லை என்பதை உறுதி செய்யுமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் கட்சியின் செயற்குழு உறுப்பினர் தினூக் கொலம்பகே வெளியிட்ட அறிக்கையில்,
நாட்டில் உணவு விலைகள் மற்றும் உணவு விநியோகத்தை உறுதிப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கிறது.
ஜனாதிபதியும் அரசாங்கமும் தொடர்ந்து புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தினாலும் நாட்டில் குறைந்த வாழ்க்கைச் செலவை உறுதி செய்ய அவர்களால் முடியவில்லை.
ஒரு வார இடைவெளியில் அவர்களால் முடிவுகளைத் தர முடியவில்லை என்றால், அவர்கள் தோல்வியடைந்ததை ஒப்புக் கொள்ள வேண்டும்.
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அத்தியாவசிய உணவு விநியோகத்துக்கான அவசரகால விதிமுறைகளை இலகுவாக கருத முடியாது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.