சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று பகவான் கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது.
சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இன்று 31-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 9.15 மணிக்கு பகவான் கிருஷ்ணருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து செப்டம்பர் 1-ந்தேதி காலை 7 மணிக்கு பகவான் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் கவெனிதா செய்து வருகிறார்.
அதேபோல் சோழிங்கநல்லூரில் உள்ள இஸ்கான் கோவிலில் நேற்று (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு 10.30 மணிக்கு ஸ்ரீராதா கிருஷ்ணனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 11.30 மணிக்கு நள்ளிரவில் கிருஷ்ணரின் தெய்வீக தோற்றத்தை நினைவுகூரும் தரிசனம் மற்றும் ஆரத்தி நடைபெற்றது.
தொடர்ந்து 31-ந்தேதி(இன்று) இஸ்கான் உலகம் முழுவதும் நிறுவனர் ஆச்சார்யாவின் 125-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் வீடுகளில் இருந்தபடி இணையதளம் மூலம் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்கலாம் என்று கோவில் தலைவர் சுமித்ரா கிருஷ்ணதாஸ் தெரிவித்து உள்ளார்.