அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு கோபாலனை தங்கள் இல்லங்களுக்குப் பெண்கள் அழைப்பர். அன்று பல கோவில்களில் “உறியடி” திருவிழா நடைபெறும்.
ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன்னர் அவரை வழிபடுவர்கள் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை வரையவும்.
ஸ்ரீகிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும். கிருஷ்ணனுக்கு கமல பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும். மூன்று அல்லது மூன்றின் பெருக்குத்தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும். அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.
பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும். சந்தனம், தாழம்பூ, மல்லிகை, சம்பா மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.
வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும்.
ஸ்ரீகிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் பெருக்கல் தொகை எண்ணிக்கையில் பிரதட்சணம் செய்ய வேண்டும்.
கிருஷ்ண பகவான் அஷ்டமி திதியில், சிராவண மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் நடுஇரவில், ரோகிணி நட்சத்திரத்தில் ரிஷப ராசியில் பிறந்தார்.
கோகுலாஷ்டமி திதியில், கிருஷ்ண தத்துவம் இப்பூவுலகில் 1000 மடங்கு அதிகம் ஆகியுள்ளது. மீதி நாட்களைக் காட்டிலும் அன்றைக்கு கிருஷ்ண தத்துவம் அதிக செயலாற்றலைக் கொண்டிருப்பதால் ‘ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என நாமஜபம் செய்தால் கிருஷ்ணரின் அருள் நமக்கு அதிக பலனைக் கொடுக்கும்.
நடு இரவில் கிருஷ்ணனை தொட்டிலில் போட்டு பிறந்த நாளைக் கொண்டாடும் வரையில், விரதம் இருக்க வேண்டும். நடு இரவில் பிரசாதத்தை உட்கொண்டு உபவாச விரதத்தை முடிக்கலாம். அல்லது மறுநாள் காலையில் உபவாசத்தை முடிக்கலாம்.
அன்று மக்கள் இனிப்புகள், காரங்கள் செய்து குறிப்பாக சீடை வகைகள் பல செய்து கண்ணனுக்கு நிவேதனம் செய்து மகிழ்வர்.
அரிசி மாவினால் கண்ணனின் காலடிகளை இட்டு கோபாலனை தங்கள் இல்லங்களுக்குப் பெண்கள் அழைப்பர். அன்று பல கோவில்களில் “உறியடி” திருவிழா நடைபெறும்.
கிருஷ்ண ஜெயந்தி தினத்தன்று கணவன், மனைவி இருவரும் தம்பதி சகிதமாகவே விரதம் இருக்க வேண்டும். பகலில் விரதம் இருக்க வேண்டும். இரவில் ஸ்ரீகிருஷ்ணரை பூஜித்து கண் விழித்து இருந்து அவரது வரலாறை கேட்க வேண்டும்.
மறுநாள் கிருஷ்ணருக்கு மீண்டும் பூஜைகள் செய்து வழிபாடுகள் நடத்தி அன்னதானம் செய்ய வேண்டும். அதன்பிறகு விரதத்தை பூர்த்தி செய்வது மிகவும் சிறந்தது.