நிக்கோல் ஜீயின் இறுதி சமூக ஊடக இடுகைகளில் ஒன்று, காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குழப்பங்களுக்கு மத்தியில் ஆப்கானிய குழந்தையொன்றை கையில் ஏந்தியவாறு இருப்பதை வெளிக்காட்டியுள்ளது.
அமெரிக்க மரைன் சார்ஜென்ட் தனது நாட்டின் குடிமக்களுக்கு உதவும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்களில் ஒருவராக இருந்தார் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆப்கானியர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும் விமானங்களுக்கு கொண்டு சேர்க்கும் பணிகளையும் முன்னெடுத்தார்.
ஆனால் வியாழக்கிழமை கபூல் விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட 13 அமெரிக்க இராணுவ வீரர்களில் அவரும் ஒருவாக இருந்தார்.
23 வயதான நிக்கோல் ஜீ கலிபோர்னியாவின் சேக்ரமெண்டோவைச் சேர்ந்தவர். அவர் 2017 இல் கடற்படையில் சேர்ந்தார்.
இந் நிலையில் அவர் தற்கொலை தாக்குதலில் சிக்கி உயிரிழப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பதிவில், காபூல் விமான நிலையத்திற்கு வெளியே குழப்பங்களுக்கு மத்தியில் ஆப்கானிய குழந்தையொன்றை கையில் ஏந்திய புகைப்படத்துடன் “நான் எனது தொழிலை விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.