அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் மற்றொரு தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டில் பெயரிடப்படாத இஸ்லாமிய அரசுடன் (ஐஎஸ்) இணைந்த தீவிரவாதிகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் ஞாயிற்றுக்கிழமை காபூல் விமான நிலையத்திற்கு அருகில் “குறிப்பிட்ட, நம்பகமான அச்சுறுத்தல்” பற்றி ஒரு புதிய எச்சரிக்கையை விடுத்தது.
அதேநேரம் விமான நிலைய வாயில்களுக்கு வெளியே உள்ள பகுதிகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கர்களைக் கேட்டுக் கொண்டது.
இதனிடையே வெள்ளை மாளிகையில் சனிக்கிழமை பிற்பகல் ஜோ பைடன் ஒரு செய்திக் குறிப்பை வெளியிட்டார்.
அதில், கபாபூல் விமான நிலையத்தில் பயங்கரவாதத் தாக்குதலுக்கான அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. அடுத்த 24-36 மணி நேரத்தில் ஒரு தாக்குதல் நடத்தப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக எனது தளபதிகள் எனக்கு தகவல்கள் அளித்ததாக கூறினார்.
காபூலின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தது 169 ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் மற்றும் 13 அமெரிக்க சேவை உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதல் நடந்து 48 மணி நேரத்திற்குள், விமான நிலைய குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்றுள்ள இஸ்லாமிய அரசை அமெரிக்கா சனிக்கிழமை தாக்கியது.
பழிவாங்கும் விமானத் தாக்குதலில், அமெரிக்க இராணுவத்தின் ட்ரோன் தாக்குதல்கள் ஐ.எஸ் அமைப்பின் ஒரு தளத்தை குறிவைத்து.
ஆப்கானிஸ்தானின் நங்கஹார் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதல் எந்தவிதமான பொதுமக்களின் உயிரிழப்புகளையும் ஏற்படுத்தவில்லை என்பதை பென்டகனின் ஆரம்ப அறிக்கைகள் உறுதிபடுத்தின.