ஒரு மனிதன் சிரிக்கும்போது அவனுடைய உடலில் பல இரசாயன மாற்றங்கள் ஏற்படுகின்றன.உடலின் இரத்த ஓட்டம் சீராகும். இதனால் இருதயத் துடிப்பு சீராகும்.இரத்த அழுத்த நோய்கள் உள்ளவர்களுக்கு சிரிப்பு ஒரு சிறந்த மருந்து.சிரிக்கும்போது நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள பிராண வாயு நன்கு உட்சென்று உடலிற்கு புத்துணர்வைத் தரும்.
சிரிப்பதால் மன அழுத்தம், மன இறுக்கம், மன உளைச்சல் குறையும்.ஜீரண உறுப்புகள் சீராக செயல்பட்டு மலச்சிக்கல் தீரும்.சிந்தனை செயல் அதிகரிக்க சிரிப்பே சிறந்தது.சிரிக்கும் போது முகத்தின் தசைகளுக்கு பயிற்சி கிடைக்கிறது. இது முகத்தின் அழகை அதிகரிக்க காரணமாகிறது.நீண்ட சிரிப்பு, உடலில் உள்ள அதிக கலோரிகளை எரிக்கப் பயன்படுகிறது.சிரிக்கும் பொழுது உடல் வலியைக் குறைக்கும் ஹார்மோன் உற்பத்தியாகிறது.