இலங்கையில் நிலவும் கோவிட் பரவல் சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்கு நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள ஊரடங்கு உத்தரவு போதுமானதாக இரு்காது என தேசிய சக்தியின் செயலாளர், வைத்தியர் நிஷால் அபேசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அத்துடன் ஆலோசனைக்கு செவிசாய்த்து தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை 3 வாரங்களுக்கு நீடிக்குமாறும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை நோயாளிகளின் எண்ணிக்கை, இறப்புகள், வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, வைத்தியசாலைகளின் இடவசதி மற்றும் வைரஸின் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பயணக்கட்டுப்பாடுகளின் காலம் தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கோவிட் தொற்று காரணமாக நாட்டில் கடந்த 20ஆம் திகதி இரவு பத்து மணி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்குமாறு தொடர்ச்சியாக சுகாதார தரப்பினர் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது..