ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக அஜிசுல்லா ஃபாஸ்லி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேற்கத்திய வீரர்கள் திரும்பப் பெறப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் சரிந்ததைத் தொடர்ந்து தலிபான்கள் அரசியல் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டதையடுத்து, அவரது நியமனம் நாட்டின் கிரிக்கெட்டுக்கு பாரிய வளர்ச்சியாக அமைந்துள்ளது.
ஃபாஸ்லி முன்னதாகவே 2018 செப்டெம்பர் – 2019 ஜூலை வரை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார்.
தலிபான்கள் ஞாயிற்றுக்கிழமை ஏ.சி.பி. அதிகாரிகளுடன் ஒரு சந்திப்பை நடத்திய பிறகு தலைவர் பதவிக்கு ஃபாஸ்லி நியமிக்கப்பட்டார்.
ஃபஸ்லி இரண்டு தசாப்தங்களாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்டுடன் தொடர்புடையவர், மேலும் நாட்டில் விளையாட்டை நிறுவிய வீரர்களின் ஆரம்ப குழுவில் ஒருவர். அவர் கடந்த காலத்தில் ஏ.சி.பி.யின் துணைத் தலைவர் மற்றும் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
இலங்கையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வரவிருக்கும் ஒருநாள் தொடரை செப்டெம்பரில் பல தடைகளை கடந்து வெற்றிகரமாக நடத்துவதே ஃபாஸ்லியின் உடனடி பணியாக தற்சமயம் உள்ளது.
எனினும் இலங்கையில் அதிகரித்து வரும் கொவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கை காரணமாக இந்த தொடர் இலங்கையில் நடத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.