ஆப்கானிஸ்தானுக்கான அனைத்து ஆயுத விற்பனையையும் அமெரிக்கா நிறுத்தியுள்ளது.
தலிபான்கள் நாட்டின் கட்டுப்பாட்டை எடுத்த மூன்று நாட்களுக்குப் பிறகு இது தொடர்பான ஒரு தீர்க்கமான முடிவினை ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் வியாழனன்று எடுத்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு நிலுவையில் உள்ள அல்லது வழங்கப்படாத ஆயுதப் பரிமாற்றங்கள் இப்போதைக்கு பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு ஒப்பந்ததாரர்களுக்கு ஒரு அறிவிப்பில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் அரசியல்/இராணுவ விவகார பணியகம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதியாளர்களுக்கான புதுப்பிப்புகளை வெளியிடும் என்று அறிவிப்பு மேலும் கூறியுள்ளது.
227 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஆயுதங்களை அமெரிக்கா 2020 வரை ஆப்கானிஸ்தானுக்கு விற்றதாக தரவுகள் தெரிவிக்கின்றன.