எழுதியவர் :வெற்றி துஷ்யந்தன்
இயக்குனர் ரஞ்சித் யோசப்பின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் “சினம் கொள்” திரைப்படமாகும். சமகால தமிழ் நில வாழ்வியலை நிதர்சனமாக புடம் போட்டுக் காட்டிய படைப்பாக வெளியாகி உலக மக்களிடையே நல் வரவேற்பைப் பெற்றிருந்தது இந்தத் திரைப்படம். 2009 ற்கு பின்னரான சூழலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இத்திரைப்படத்தின் வசனக்களையும், பாடல்களையும் தீபச்செல்வன் எழுதியிருந்தார். தமிழக, தாயக, சிங்கள் கலைனஜ்ர்களால் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் போருக்குப் பின்னைய கால வாழ்வை நேர்த்தியாக பதிவு செய்த ஒரு படமாக அமைந்தது எனலாம்.
“சினம் கொள்” திரைப்படத்தில் இவரின் வரிகளிலமைந்த ஒரு பாடல் உண்மையில் மிகத் தரமான உணர்வுப் பாடலாக அமைந்திருந்தது. இசையமைப்பாளர் என்.ரகுநந்தனினிசையிலும், ரிகேஷ் குமாரின் குரலிலும் வெலியான இந்தப் பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் வலிகளின் கனத்தை வார்த்தைகளால் கொட்டியதாக அமைந்திருந்தது.
“தனிமரம் ஒன்று
காற்றினில் ஆட
தாய் மனம் போல
தாயகம் துடிக்க”
ன்ற வரிகளைப் பல்லவியாகக் கொண்டு ஆரம்பமாகும் இந்தப்பாடலை இசையமைப்பாளர் ரகுநந்தன் அவர்கள் கண்களைக் குளமாக்கும் வகையில் மெட்டினாலும், இசையினாலும் கொடுத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
பாடலின் முதலாவது இன்றலூட்டில் அவர் பயன்படுத்தியிருக்கின்ற அந்த அழகிய சாரங்கி வாத்தியம் உண்மையில் உள்ளத்தை உருக்கியிருக்கின்றது. அதைத் தொடர்ந்து பின்னால் வரும் புல்லாங்குழல் கூட இதயத்தை உருக்கியிருக்கின்றது. இரண்டாவது சரணாத்திற்கு முன்னரான இன்ரலூட் ஹம்மிங் மிக அருமையாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக இப்பாடலைப் பாடிய பாடகர் கரிகேஷ் குமார் தன் குரல் மூலம் தனித்துத் தெரிகின்றார். காட்சிப் புலத்தை உள்வாங்கி இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் ஆகிய மூவரும் கடுமையாக உழைத்துள்ளனர்.
இத்திரைப்படத்தில் இடம்பெற்ற மற்றைய பாடலான,
“வீரன் கன்கள் கலங்கிடுமோ”
பாடலுலும் உண்மையில் ரகுநந்தனின் அருமையான இசையிலும் வந்தனா ஸ்ரீநிவாசனின் மயக்கும் குரலிலும் பாடப்பட்டு காத்திரமான இவரின் வரிகள் ஊடாக பலராலும் பாராட்டப்பட்டார்.
இதன் தொடர்ச்சியாக வெளியீட்டிற்கு தயாராகவிருக்கின்ற இயக்குனர் இராசேந்திர சக்கரவர்த்தியின் இயக்கத்திலும் இயக்குனர் சமுத்திரக்கனி, யோகிபாபு ஆகியோர் நடித்திருக்கின்ற “யாவரும் வல்லவரே” என்ற மற்றுமொரு தென்னிந்திய திரைப்படத்திலும் தீபச்செல்வன் பாடலொன்றையும் எழுதியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்போடு உருவாகி வரும் இந்தத் திரைப்படத்தில் இவரின் பாடல் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
எழுத்துச் சூழலை பொறுத்தவரையில் நிலம் சார்ந்து தொடர்ச்சியாக படைப்புக்களை எடுதிக் கொண்டிருக்கும் தீபச்செல்வன் தாயக மக்களின் பிரச்சினைகளை பல்வேறு எழுத்து வகையறாக்கள் மூலம் எழுதி இன்றைக்கு தென்னிந்திய திரைத்துறையில் ஈழ மக்கள் சார்ந்த விடயங்களை எழுதக் கூடியவராக மிகிழ்ந்திருப்பதன் விளைவு இன்றைக்கு அவரை தென்னிந்திய திரைத்துறை பாடலாசிரியர் தளத்துக்கு கொண்டு வந்திருக்கிறது.
ஏலவே இசைவாணர் கண்ணனின் இசையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் எழுதிய கவிதை ஒன்று பாடலாக பரிணமித்தது. “பூப்பூத்த நகரில் யார் வந்து” எனத் தொடங்கும் இந்தப் பாடலும் மக்கள் மத்தியில் நல்வரவேற்பைப் பெற்றது. பல்பரிணாம் கொண்ட ஒரு படப்பாளியான தீபச் செல்வனின் மேற்குறித்த பாடல்கள் தொடர்ச்சியாக இந்தத் தளத்தில் அவர் பயணிப்பதற்கான ஆரோக்கியச் சமிக்ஞையை காட்டி நிற்கின்றது.
நன்றி – தினகரன் (கொழும்பு)