பசுபிக் பெங்கடலில் அமைந்துள்ள வனுவாட்டு குடியரசில் 7.1 ரிச்டெர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுனாமி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை நிலையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியில் இருந்து 300 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் வானுவாட்டு போர்ட்-ஓல்ரி கடற்கரையில் நிலநடுக்கம் தாக்கியதாகக் கூறியது. இந்த நிறுவனம் நிலநடுக்கத்தை ரிச்டெர் அளவுகோலில் 7.1 ஆக பதிவுசெய்தது.
போர்ட்-ஓல்ரிக்கு வடமேற்கில் சுமார் 20 கிலோ மீற்றர் தொலைவில் 91 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.