அது மட்டுமல்ல கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே தீர்வல்ல. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சரியான நேரத்தில் நாடு முடக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி பிரதம கொரடாவான லக்ஸ்மன் கிரியெல்ல சபையில் தெரிவித்தார்.
தீர்மானங்கள் எடுப்பதில் ஏற்பட்ட தாமதங்களே வைரஸ் பரவலுக்கு காரணமாகும் எனவும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை, வைரஸ் தொற்று (கொவிட்-19) (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டமூலத்தின் இரண்டம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார், அவர் மேலும் கூறுகையில்.
கொவிட் தரவுகள் பொய்யானதென வெளிப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல கொவிட் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் மட்டுமே தீர்வல்ல. நியூசிலாந்து ஒரு நகரில் ஒரு கொவிட் வைரஸ் தொற்றாளர் அடையாளம் காணப்பட்டதற்கு அந்த நகரத்தையே முடிக்கியுள்ளனர். ஆகவே தீர்மானங்களை சரியான நேரத்தில் சரியாக முன்னெடுக்க வேண்டும். கொவிட் வைரஸ் பரவல் குறித்து முதலில் எதிர்க்கட்சி தலைவரே சபையில் கூறினார். அது வரையில் அரசாங்கத்தில் எவருக்கும் இவ்வாறான ஒரு வைரஸ் பரவுவதே தெரியாது. ஜனவரி 27 ஆம் திகதி விமான நிலையத்தை மூடுமாறு கூறினார். பெப்ரவரி 5 ஆம் திகதியும் கூறினார். அரசாங்கம் கேற்கவில்லை. தடுப்பூசி வழங்க ஒரு வருடம் தாமதமானது. இந்த தாமதங்களே அனைத்திற்கும் காரணமாகும் என்றார்.
_____________________________________________________________________________