ஹங்கேரியில் உள்ள நெடுஞ்சாலையில் பயணித்த பேருந்து, பாதுகாப்புப் கடவையில் மோதி, கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தினால் குறைந்தது 8 பேர் உயிரிழந்துடன், டஜன் கணக்கானோர் காயமடைந்தனர்.
ஹங்கேரியின் எம்-7 நெடுஞ்சாலையில், தலைநகர் புடாபெஸ்ட் மற்றும் பாலாட்டன் ஏரிக்கு இடையில், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணியளவில் விபத்து ஏற்பட்டது.
தேசிய ஆம்புலன்ஸ் சேவையின் செய்தித் தொடர்பாளர் பால் கியோர்ஃபி, ஹங்கேரிய செய்தி நிறுவனமான எம்.டி.ஐ.யிடம், எட்டு இறப்புகளுக்கு மேலதிகமாக, மேலும் எட்டு பேர் பலத்த காயமடைந்தனர் மற்றும் 40 பேருக்கு சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக கூறியுள்ளார்.
_____________________________________________________________________________