ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு தென்மேற்கே 130 கிமீ (80 மைல்) தொலைவில் உள்ள கஸ்னி மாகாணத்தின் தலைநகரான கஸ்னியை தலிபான் ஆயுதக் குழு கைப்பற்றியுள்ளது.
இது சில நாட்களுக்குள் தலிபானியர்களால் கைப்பற்றப்படும் 10 ஆவது மாகாண தலைநகரமாகும்.
கஸ்னியை கைப்பற்வது, தலிபான்கள் காபூலைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
நாட்டின் 34 மாகாண தலைநகரங்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு இப்போது தலிபான் கட்டுப்பாட்டில் உள்ளது.
20 வருட இராணுவ நடவடிக்கைகளுக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் பிற வெளிநாட்டு படைகள் திரும்பப் பெறுவதால் கிளர்ச்சியாளர்கள் அன்றாடம் புதிய பகுதிகளை கைப்பற்றும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
கஸ்னியில் ஒரு மாகாண சபை உறுப்பினர் பிபிசியிடம் தலிபான்கள் நகரின் பெரும்பகுதியை கைப்பற்றியுள்ளதாகவும், கஸினியின் புறநகரில் ஒரு பொஸ் தளம் மட்டுமே ஆப்கான் பாதுகாப்புப் படையினரால் கட்டுப்படுத்தப்படுவதாகவும் கூறினார்.
புதன்கிழமை கந்தஹார் நகரத்திலும் கடும் சண்டை பதிவாகியுள்ளது. தலிபான்கள் நகரத்தின் சிறைச்சாலையை கைப்பற்றியதாகக் கூறுகின்றனர். இருப்பினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.
ஹெல்மண்ட் மாகாணத்தின் தலைநகரான தெற்கு நகரமான லஷ்கர் காவில், தீவிரவாதிகள் பொலிஸ் தலைமையகத்தை கைப்பற்றினர்.
இதேவேளை கடந்த மாதத்தில் ஆப்கானிஸ்தானில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. கூறுகிறது.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news