சைவ சித்தாந்தத்தின் முதன்மை நூலாகக் கருதப்படும் இந்த திருமந்திர நூல், ‘அன்பே சிவம், சிவமே அன்பு’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது.
திருமூலர் இயற்றிய ‘திருமந்திரம்’ நூல், ஒரு ஒப்பற்ற மெய்யியல் நூலாகும். சைவ சித்தாந்தத்தின் முதன்மை நூலாகக் கருதப்படும் இந்த திருமந்திர நூல், ‘அன்பே சிவம், சிவமே அன்பு’ என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த சிறப்புமிக்க நூலில் இருந்து ஒரு பாடலையும், அதன் பொருளையும் இங்கே பார்ப்போம்…
பாடல்:-
ஈதென்று அறிந்திலன் இத்தனைக் காலமும்
ஈதென்று அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்
ஈதென்று அறியும் அறிவை அறிந்தபின்
ஈதென்று அறியும் இயல்புடையோனே.
பொருள்:-
இந்த உடம்பு என்பது நாம் அல்ல, அது வேறானது என்ற உண்மை இத்தனைக் காலமும் விளங்காதிருந்து விளங்கியது. உயிரை இயக்குவன் யாரென்று அறியவும் பல யுகங்கள் ஆகின. அதனை அறிந்தபின் வேறு எதையும் அறியவில்லை. எல்லாம் சிவன் என்பதை அறிந்தேன்.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news