ஜப்பானின் தலைநகர் டோக்கியோவில், கடந்த மாதம் 23 ஆம் திகதி ஆரம்பமாகி, நடைபெற்று வந்த 32-வது ஒலிம்பிக் போட்டி இன்றுடன் (08.08.2021) முடிவடைந்துள்ளது.
கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ,இம்முறை ஒலிம்பிக் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று நிறைவுக்கு வந்துள்ளமை முக்கிய அம்சமாகும்.
சுமார், 205 நாடுகள் பங்கேற்றுள்ள இப்போட்டியில், இந்திய அண பங்கேற்கும் போட்டிகள் நேற்றுடன் முடிவடைந்தன. இறுதி நாளான இன்று 13 தங்கப்பதக்கத்துக்கான போட்டிகள் அரங்கேற்றப்பட்டதுடன், போட்டிகள் முடிந்ததும் நிறைவு விழா நடைபெறும். அதில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுவதும் வழக்கமானதே.
தற்போதைய நிலவரப்படி பதக்க பட்டியலில், அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி, 33 வெண்கலம் என 113 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.
சீனா 38 தங்கம், 32 வெள்ளி, 18 வெண்கலம் என மொத்தம் 88 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறது. மேலும், 27 தங்கம், 14 வௌ்ளி மற்றும் 17 வெங்கலம் என மொத்தம் 58 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளமையும் குறிப்பிடதக்கது.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news