ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் ஸ்தாபகத்தவைரும், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் நிதி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் உயர் பீடக் குழுவினருடன் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக முக்கியமான சந்திப்பொன்றை விரைவில் நடத்தவுள்ளது.
இந்தச் சந்திப்புக்கான பூர்வாங்க செயற்பாடுகளை இறுதி செய்யும் வகையில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பில் மிகவும் இரகசியமான முறையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போதுரூபவ் மிக முக்கியமான நீண்டகாலமாக நிடித்துவரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இருவரும் பரஸ்பரம் கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது “அரசாங்கத்தரப்பினரும் கூட்டமைப்பும் சந்தித்து உரையாடுவதாக இருந்தால் அது அரசியல் தீர்வினை மையப்படுத்தியதாகவே அமைய வேண்டியது கட்டாயமாகின்றது. ஆகவே அரசியல்தீர்வு விடயத்தில் எவ்விதமான விடயங்களை பரஸ்பரம் கலந்துரையாடலாம் என்பது தொடர்பில் முதலில் இணக்கப்பாடுகளை எடுக்காது சந்திப்புக்களையும் பேச்சுக்களையும் நடத்துகின்றமை காலத்தினை விரயமாக்கும் செயற்பாடாகவே இருக்கும்.
ஆகவே அரசாங்கம் இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் எவ்விதமான நிலைப்பாட்டில் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்வது எமக்குள்ள முதலாவது கரிசனையாகவுள்ளது” என்ற தொனிப்பட சுமந்திரன் அமைச்சர் பேராசிரியர்.ஜி.எல்.பீரஸிடம் கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
அச்சமயத்தில் அமைச்சர் பேராசிரியர்.ஜி.எல்.பீரிஸ் “அரசாங்கம் புதியதொரு அரசியலமைப்பை உருவாக்குவதில் கரிசனை கொண்டுள்ளது. அத்துடன் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள பூகோள பிராந்திய அரசியல் சூழமைகளுக்கு அமைவாக இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து நடைமுறைச்சாத்தியமானதும் தீர்க்கமானதுமான விடயங்களை முன்னெடுப்பதில் அதிகளவு கரிசனை கொண்டிருக்கின்றது” என்று பேராசிரியர்.ஜி.எல்.பீரிஸ் பதிலளித்துள்ளார்.
அதேநேரம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் சந்திப்பொன்றை நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்த போதும் அது இறுதிச் சமயத்தில் கைவிடப்பட்டது. அச்சந்திப்பில் கலந்துரையாடப்பட இருந்த விடயங்கள் தொடர்பில் சம்பந்தன் அவர்கள் வரிவான கடிதமொன்றையும் அவருக்கு (ஜனாதிபதிக்கு) எழுதியிருக்கின்றார்.
அக்கடிதத்தில் உள்ள விடயங்கள் தொடர்பில் எமக்கு இடையிலான கலந்துரையாடல்கள் ஆரம்பமாகுவதாக இருந்தால் அது சிறந்ததாக இருக்கும்” என்ற சாரப்பட சுமந்திரன் குறிப்பிட்டும் இருக்கின்றார்.
அச்சமயத்தில் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தை விடயங்களை ஜனாதிபதி கோட்டாபய நிதி அமைச்சர் பஷிலிடத்தில் ஒப்படைத்துள்ளார். அவரே இந்த விடயங்களை கையாளவுள்ளார். உங்களுடன் பேசும் விடயங்களை அவருடன் பகிர்ந்து கொண்டு அடுத்தகட்டமாக அவர் தலைமையிலான அரச குழுவினருடன் நீங்கள் பேச்சக்களை முன்னெடுப்பதற்கே அதிகமான வாய்ப்புக்கள் உள்ளன” என்று சாரப்பட கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி இனப்பிரச்சினைக்கான தீர்வினை அடைந்து கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா காலத்தில் தானும் நீலன் திருச்செல்வமும் கூட்டிணைந்து தயாரித்திருந்த ‘பிராந்தியங்களின் ஒன்றியம்’ என்ற தீர்வுப் பொதியில் நடைமுறைச்சாத்தியமான விடயங்களை மையப்படுத்தி இருதரப்பு பேச்சுக்களை ஆரம்பிப்பதானது பொருத்தமானதாக இருக்கும் என்று அமைச்சர் பேராசிரியர் யோசனையையும் முன்வைத்திருக்கின்றார்.
எனினும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் பேராசிரியர் பீரிஸின் யோசனையை முழுமையாக ஏற்றுக்கொண்டதாக உடனடியாக தெரிவித்திருக்காதபோதும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யவல்ல அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வே எமது நீண்டகால எதிர்பர்ப்பு என்று தொனிப்பட பதிலளித்துள்ளார்.
இவ்வாறிருக்கரூபவ் ஜனாதிபதி கோட்டாபயவுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையிலான சந்திப்பு இறுதி நேரத்தில் இரத்தாகியதன் பின்னர் கூட்டமைப்பு நம்பிக்கையை கைவிடாது இருக்குமாறும் பிறிதொரு தருணத்தில் சந்திப்பு நடக்கும் என்றும் ஜனாதிபதி தரப்பிலிருந்து சம்பந்தனுக்கு தகவல் அனுப்பட்டிருந்தது. அதனை சம்பந்தனும் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதேநேரம் இந்தச் சந்திப்பு இரத்தாகியதன் பின்னர் இனப்பிரச்சினை விடயத்தில் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்த முடியும் என்று இனினும் எதிர்பார்க்கின்றீர்களா? என்று சுமந்திரனிடத்தில் கேள்வி எழுப்பியபோது “ஐக்கிய இலங்கைக்குள் தீர்வை எட்டுவதே எமது நிலைப்பாடு. ஆகவே அரசாங்கத்துடன் பேச்சுக்களை முன்னெடுப்போம். அது நியாயமான நிரந்திரமான அர்த்தபுஷ்டியானதொரு அதிகாப்பகிர்வினையும் எமதுமக்களின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்வதை அடியொற்றியதாகவே இருக்கும்” என்று பதிலளித்திருந்தார்.
இதேவேளை சொற்பகால இடைவெளிக்குப் பின்னர் இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற அமர்வுக்காலத்தில் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு சம்பந்தன் தலைமையில் கூடியிருந்தது.
இதன்போது புதிய அரசியலமைப்பு இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பூகோள மாற்றங்கள் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் உள்ளிட்ட சில விடயங்களை கூட்டமைப்பின் தலைவர் தொட்டுச் சென்றிருந்தார். ஆனால் இவை அனைத்தும் வழமையான விடயங்களே என்றும் தற்போதைய சூழலில் அரசாங்கம் இந்தவிடயங்கள் பற்றி கரிசனை கொள்ளுமா என்றும் ஏனைய உறுப்பினர்கள் தமக்குள் முணுமுணுத்துள்ளனர். ஆனால் மேற்படி இரகசிய நகர்வின் சமிக்ஞையாகவே அவருடைய கருத்துக்கள் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news