ஆகஸ்ட் மாதத்தில் ரொறொன்ரோவில் வீடுகளின் சராசரி விலை அதிகரிப்பு.
கனடா-ரொறொன்ரொ–ரொறொன்ரோ பெரும்பாகத்தில் கடந்த மாதம் விற்பனை பட்டியல்கள் தொடரந்து குறையத்தொடங்கிய போதிலும் சாதனை படைக்கும் எண்ணிக்கையில் வீடுகள் விற்பனையாகி உள்ளன என நில புலன்கள் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
தனது அங்கத்தவர்கள் 9,813 விற்பனைகளை செய்துள்ளதாக ரொறொன்ரோ நில புலன்கள் சபை தெரிவித்துள்ளது. இவை கடந்த வருடம் இதே மாதம் இடம்பெற்ற விற்பனை விகிதாசாரத்தை விட 23.5சதவிகிதம் அதிகமெனவும் தெரிவித்துள்ளனர்.
சொத்து வகைகளை பொருட்படுத்தாத வகையில் விற்கப்பட்ட சராசரி வீடுகளின் விலை 710,410டொலர்கள் ஆகும். இந்த அதிகரிப்பு 17.7சதவிகிதம் அதிகரிப்பை காட்டுகின்றது.
ரொறொன்ரோ நகரில் தனித்து நிற்கும் வீடொன்றின் சராசரி விலை 1.2மில்லியம் டொலர்களாகும்.அதிகரிப்பு 18.3சதவிகிதம்.
வன்கூவரின் வெளிநாட்டு நுகர்வோர்களிற்கான புதிய 15சதவிகித வரி விகிதம் முதலீட்டாளர்களை ரொறொன்ரோவிற்கு அனுப்பியிருக்கலாம் என கருதப்படுகின்றது.
ஒரு வருடத்திற்கு முன்னய விலையுடன் ஒப்பிடும் போது வன்கூவரின் ஆகஸ்ட் மாத விற்பனை 26சதவிகிதம்வீழ்ச்சியடைந்துள்ளது.
இருப்பினும் வன்கூவரின் வீட்டு விலைகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சகல குடியிருப்பு உடமைகளும் கடந்த வருடத்தை விட 31.4சதவிகிதம் அதிகரித்து 933,100டொலர்களாக காணப்படுகின்றது.