தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பொதுபோக்குவரத்து சேவை நூற்றுக்கு நூறு சதவீதம் பாதுகாப்பற்ற தன்மையில் காணப்படுகிறது.
பொது போக்குவரத்து சேவையில் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா, என்பது தொடர்பில் கண்காணிக்க பாதுகாப்பு தரப்பினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள். பொது மக்களும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.
மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்தை முடக்கவது பயனற்றது. அனைத்து மாகாணங்களிலும் கொவிட் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அரச சேவையாளர்கள் சேவைக்கு சமூகமளிக்கும் நேரத்தை மாற்றியமைக்க தீர்மானித்துள்ளோம் என போக்குவரத்து மற்றும் சமூதாய சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மாகாணங்களுக்கிடையில் போக்குவரத்தை முடக்குவதால் எவ்வித பயனும் ஏற்படாது.அனைத்து மாகாணங்களிலும் கொவிட் -19 வைரஸ் தாக்கம் செலுத்தியுள்ளன.
அனைத்து சவால்களையும் வெற்றிக் கொள்ள வேண்டிய நிலை காணப்படுகிறது. மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவையினை முடக்கினால் பொது மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் பொது போக்குவரத்து சேவை நூற்றுக்கு நூறு வீதம் பாதுகாப்பற்ற தன்மையில் காணப்படுகிறது. கடந்த காலங்களில் இடம் பெற்ற ஒரு சில பொறுப்பற்ற செயற்பாடுகளின் காரணமாக கொவிட்-19 வைரஸ் தாக்கம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.
பொது போக்குவரத்து சேவையில் முன்னெடுக்கப்பட வேண்டிய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் முழுமையாக பின்பற்றப்படுகின்றனதா என்பது தொடர்பில் கண்காணிக்க பாதுகாப்பு தரப்பினர் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளார்கள். கொழும்பு நகரில் காலை மற்றும் மாலை வேளைகளில் அலுவலக புகையிரத மற்றும் பேருந்து சேவைகளில் இவ்வாறான பிரச்சினை நிலவுகிறது.
அரச ஊழியர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் சேவைக்கு சமூகமளிக்கும் நேரத்தை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்தும் பொது பயணிகளும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்திற்காக 18 ஆயிரம் தனியார் பேருந்துகளும்,4500 அரச போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகளும் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே பொது பயணிகள் பேருந்துகளில் நெருக்கமாக பயணிப்பதை முடிந்தளவிற்கு தவிர்த்துக் கொள்ள வேண்டும்.என்றார்.
_____________________________________________________________________________
உடனுக்குடன், உவப்பான செய்திகளுக்கு: http://Facebook page / easy 24 news