கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே, ஆனால் நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கமாகும் என சபையில் அமைச்சர் சமல் ராஜபக்ஷதெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்தில் வெள்ளம்குலம் பிரதேசத்தில் உள்ள நூறு ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை இராணுவம் விவசாய பண்ணைகளை நடத்தி வருவதானது, புனர்வாழ்வுக்கு உற்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கத்திற்காகும் என்றார்.
இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ கூறுகையில், சிவில் பாதுகாப்பு படையணியானது கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை பேணி வருகின்றது. மொத்தமாக 47 பண்ணைகள் இவ்வாறு பராமரிக்கப்பட்டு வருகின்றது. இவற்றில் பலர் பணியாற்றுகின்றனர். இவற்றில் மன்னார் மாவட்டத்தில் வெள்ளம்குலம் பிரதேசத்தில் உள்ள நூறு ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை இராணுவம் விவசாய பண்ணைகளை நடத்தி வருகின்றது.
இந்த பண்ணையில் புனர்வாழ்வுக்கு உற்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படுவதை விளங்கிக்கொள்ள வேண்டும். இதில் பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் என தெரிவித்தார்.