டோக்கியோ ஒலிம்பிக்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 400 மீற்றர் தடை தாண்டல் ஓட்டத்தில் நோர்வேயின் கார்ஸ்டன் வார்ஹோம் தங்கம் வென்றதுடன், தனது சொந்த உலக சாதனையையும் முறியடித்தார்.
இறுதிப் போட்டியில் 400 மீற்றர் தூரத்தை வார்ஹோல்ம் 45.94 வினாடிகளில் நிறைவுசெய்தார். முன்னதாக அவர் குறித்த தூரத்தை 46.70 வினாடிகளில் நிறைவு செய்து உலக சாதனை புரிந்திருந்தார்.
இந் நிலையிலேயே அந்த சாதனை தற்சமயம் முறியடிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ரோய் பெஞ்சமின் பந்தைய தூரத்தை 46.17 வினாடிகளில் நிறைவுசெய்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.
பிரேசிலின் அலிசன் டோஸ் சாண்டோஸ் பந்தைய தூரத்தை 46.72 வினாடிகளில் நிறைவுசெய்து மூன்றாவது இடத்தை பிடித்தார்.