எக்ஸ் – பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்தை தொடர்ந்து எட்டு திமிங்கலங்கள், 48 டொல்பின்கள் மற்றும் 417 கடலாமைகள் உயிரிழந்துள்ளன.
கப்பல் தீ விபத்து தொடர்பான வழக்கு இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மே 20 ஆம் திகதி எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பிடித்த கடல் பகுதியில் இருந்து பெறப்பட்ட நீர் மாதிரிகளிலிருந்து பெட்ரோலியம் மற்றும் பிற இரசாயனத் துகள்களை அரசு ஆய்வாளர் துறை கண்டறிந்துள்ளதாகவும் நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்டது.