கிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் பணிகள் இன்று (28) ஆரம்பமாகியுள்ளன.
கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில், இராணுவம் மற்றும் காவல்துறையினரின் ஒத்துழைப்புடன் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
காலை 9 மணி முதல் குறித்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் 50 ஆயிரம் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.