வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு சுகாதார பிரிவினர் பாரிய இன்னல்களை எதிர்நோக்கி இரவு, பகல் பராது செயற்பட்டு கொரோனா தொற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் நள்ளிரவு 12 மணி தொடக்கம் அதிகாலை 5.30 மணி வரையிலான காலப்பகுதியில் மூன்றுமுறிப்பு (வவுனியா வரவேற்பு வழைவுக்கு அருகே) பகுதியில் ஏ9 வீதியூடாக வாகனங்களில் பயணிப்போருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
டெல்டா வைரஸ் தாக்கம் நாடளாவீய ரீதியில் அதிகரித்து வருகின்றமையினை அடுத்து அதனை எமது மாவட்டத்தில் கட்டுப்படுத்துவதற்காக வியாபார நோக்கம் , அலுலக தேவை போன்றவற்றிகாக வவுனியா மாவட்டத்தினுள் நுழையும் வாகனங்களில் பயணிப்போர் மற்றும் வவுனியா ஊடாக ஏனைய மாகாணங்களுக்கு செல்பவர்கள் என 300 க்கு மேற்பட்டவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.