கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம் தொடர்பில், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தெளிவுப்படுத்துவதற்கான, விசேட செயலமர்வு ஒன்றை நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் இந்த செயலமர்வு நடத்தப்படவுள்ளது.
அதில் பங்கேற்பதற்காக, ஆளும் மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு தரப்பினர், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதனால், அது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு போதிய புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கல்வித்துறை நிபுணர்கள் சிலரும் அதில் பங்கேற்கவுள்ளனர்.
நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலம், அடுத்த மாதம் 6 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.