டோக்கியோ ஒலிம்பிக் அரங்கிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதல் தங்கப்பதக்கத்தை வென்றது சீனா.
மகளிருக்கான 10 மீற்றர் எயார் ரைபிள் துப்பாக்கி சுடுதலிலேயே முதல் பதக்கத்கத்தை சீனா தட்டிச் சென்றது.
இதே பிரிவில் போட்டியிட்ட இலங்கை வீராங்கனையான தெஹானி எகொடவெல முதல் சுற்றிலேயே வெளிறேினார். இதில் இவர் 49 ஆவது இடத்தையேப் பெற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் 2020 போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று கோலகலமாக ஆரம்பமானது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பார்வையாளர்கள் இல்லாமல் அரங்கேறும் இந்தப் போட்டிகள் கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அரங்கேறி வருகின்றன.
அதன்படி மகளிருக்கான 10 மீற்றர் எயார் ரைபிள் பிரிவில் சீனாவின் யாங் குயான் தங்கப் பதக்கம் வென்றார்.
ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கத்தையும். சுவிற்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பதக்கம் வெல்லும் வீரர்கள் தங்களுக்கான பதக்கத்தை தாங்களே எடுத்து அணிந்துகொள்ள வேண்டும்.
அதன்படி டோக்கியோ ஒலிம்பிக்கில் முதல் தங்கப்பதக்கம் வென்ற சீன வீராங்கனை பதக்கத்தை தானே எடுத்து அணிந்துகொண்டு அதிலும் வரலாற்றுப் பதிவை உருவாக்கினார்.
0