கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டியின் போது இஷான் கிஷன் அதிக ஈடுபாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்.
இது அவருக்கு ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் ஒரு தனித்துவமான சாதனையை படைக்க வழிவகுத்தது.
இடது கை வீரரான 23 வயதுடைய இஷான் கிஷன் நேற்றைய ஆட்டத்தின் போது ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.
இந்த போட்டியில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அவர் மொத்தமாக 42 பந்துகளை எதிர்கொண்டு 2 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கலாக 59 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
இதனிடையே ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் அறிமுகப் போட்டியில் வேகமாக அரைசதம் குவித்த (33 பந்துகளில்) இரண்டாவது வீரர் என்று பெருமையையும் அவர் இந்த ஆட்டத்தில் பெற்றார்.
மேலும் ஒருநாள் போட்டியில் ஐம்பதுக்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற 16 ஆவது இந்திய பேட்ஸ்மேன் ஆகவும் அவர் பதிவானார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் அறிமுக வீரர் ஒருவர் எடுத்த ஒன்பதாவது சிறந்த ஓட்ட எண்ணிக்கை மற்றும் இலங்கைக்கு எதிரான அறிமுகத்தில் இந்திய பேட்ஸ்மேன் எடுத்த இரண்டாவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
முன்னதாக 2021 இல் அகமதாபாத்தில் இங்கிலாந்துக்கு எதிரான தனது அறிமுக சர்வதேச டி-20 போட்டியின் போதும் இஷான் கிஷன் அரைசதம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.