வெளிநாட்டு ஒதுக்கம் நெருக்கடி காரணமாக எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படவுள்ள எரிபொருள் இறக்குமதிக்கான நிதியை செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பியின் நிதிச்செயலாளர் சுனில் ஹந்துன்நெத்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
யூன் மாதம் நிறைவடையும் போது, வெளிநாட்டு ஒதுக்கம் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.
யூலை மற்றும் ஒகஸ்ட் மாதங்களில் 2002 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்த நேரிடும்.
1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களே மீதமாக இருக்கும்.
எனவே நாட்டில் நிதி சிக்கல்கள் ஏற்படக்கூடும் என சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.