வீராணம் அருகே கொம்பேரிக்காடு பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வராஹி அமமன் சன்னதி இருக்கிறது. இங்கு பஞ்சமி திதியையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
பஞ்சமி திதி அன்று வராஹி அம்மனை வழிபட உகந்த நாள். இந்த நாட்களில் வராஹி அம்மனை வழிபட்டு நாம் வைக்கும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைப்பாள்.
வீராணம் அருகே கொம்பேரிக்காடு பகுதியில் உள்ள முருகன் கோவிலில் வராஹி அமமன் சன்னதி இருக்கிறது. இங்கு பஞ்சமி திதியையொட்டி வராஹி அம்மனுக்கு சந்தனம். பால், தயிர் போன்ற 16 வகையான பொருட்களால் அபிஷேகமும் சிறப்பு ஆராதனையும் நடைபெற்றது.
பின்னர் வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.