முன்னணி வீரர்களான குசல் பெரேரா, துஷ்மந்தா சமீரா மற்றும் தனஞ்சய டி சில்வா உள்ளிட்ட இலங்கை அணியின் அனைத்து வீரர்களும் இந்தியாவுக்கு எதிரான வரையறுக்கப்பட்ட ஓவர் தொடருக்கு முன்னதாக தங்களது சமீபத்திய பி.சி.ஆர். சோதனைகளில் எதிர்மறையான முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பிய பின்னர் ஒரு வார கால கடினமான தனிமைப்படுத்தலை நிறைவு செய்வதால், வீரர்கள் இன்றைய தினத்துக்குள் உயிர் குமிழியில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃப்ளவர் மற்றும் தரவு ஆய்வாளர் ஜி.டி நிரோஷன், ஒரு தனி உயிர்-குமிழியில் மற்றொரு வீரருடன் சேர்ந்து, கொவிட்-19 க்கு சாதகமாக சோதனை செய்த பின்னர் இலங்கை – இந்திய தொடரில் கொவிட்-19 கவலைகள் அதிகரித்தது.
இதனால் நாளை தொடங்கப்படவிருந்த ஒருநாள் போட்டித் தொடர் ஐந்து நாட்களுக்கு (ஜூலை 18) ஒத்தி வைக்கப்பட்டது.
இந் நிலையில் இலங்கை கிரிக்கெட் அனைத்து வீரர்களிடம் மேற்கொண்ட பி.சி.ஆர். சோதனைகளில் அவர்களில் எவரும் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனால் அணி வீரர்கள் இன்று தனிமைப்படுத்தலிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பயிற்சியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்கள் புதன்கிழமை வரை தனிமையில் இருக்க வேண்டியிருக்கும், ஏனெனில் அவர்கள் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃப்ளவர் மற்றும் குழு ஆய்வாளர் ஜி.டி. நிரோஷனின் முதல் தொடர்புகளாக கருதப்படுகிறார்கள்.
இந் நிலையில் தனிமைப்படுத்தலிருந்து வெளியேறும் இலங்கை வீரர்கள் அடுத்த சில நாட்களில் படிப்படியாக பயிற்சியைத் தொடங்குவார்கள்.