பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக அதிக வெற்றிகளை தேடித் தந்தவர் என்ற சாதனை படைத்தவர் மிதாலிராஜ். பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.
இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் மிதாலிராஜ் மீண்டும் முதலிடத்தை (762 புள்ளி) பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக 8-வது இடத்தில் இருந்த மிதாலிராஜ் இந்தத் தொடரில் தொடர்ச்சியாக 3 அரைசதங்கள் (72, 59, 75 ரன்) விளாசியதன் மூலம் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறியுள்ளார்.
2005-ம் ஆண்டு முதல் முறையாக ‘நம்பர் ஒன்’ இடத்தைப் பிடித்த மிதாலிராஜ் கடைசியாக 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் உச்சத்தில் இருந்தார். தற்போது 8-வது முறையாக முதலிடத்தை அலங்கரிக்கிறார். அவரைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் லிசல் லீ 758 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.
ஒட்டுமொத்த சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் (டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியை சேர்த்து) அதிக ரன்கள் குவித்தவர் பட்டியலில் மிதாலிராஜ் முதலிடத்துக்கு (10,337 ரன், 317 ஆட்டம்) முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://Facebook page / easy 24 news