முருகப் பெருமானை வழிபடுவதற்குரிய மிக சிறந்த மாதமாக ஆனி மாதம் இருக்கிறது. எந்த வேண்டுதலாக இருந்தாலும் சரி, அந்த வேண்டுதலை ஆனி கிருத்திகை நட்சத்திரத்தன்று வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.
முருகப் பெருமானை வழிபடுவதற்குரிய மிக சிறந்த மாதமாக ஆனி மாதம் இருக்கிறது. இந்த மாதத்தில் வரும் கிருத்திகை தினத்தன்று முருகப்பெருமானுக்கு பல கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும்.
அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, முடிந்தால் முருகப்பெருமானை தரிசனம் செய்ய கோவிலுக்கு செல்லலாம். இல்லை என்றால், வீட்டில் இருக்கும் முருகப்பெருமானின் திருவுருவ படத்திற்கு, அரளி பூவால் அலங்காரம் செய்து, உங்களால் முடிந்த நைவேதியத்தை படைத்து, நெய்தீபம் ஏற்றி வைத்து உங்களது விரதத்தை தொடங்கலாம்.
திருமணமாகாதவர்களாக இருந்தால், உடல்நிலையில் எந்த பிரச்சனையும் இல்லை, ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால், ஆடிக் கிருத்திகை தினத்தன்று எதுவுமே சாப்பிடாமல் கூட மாலை 6 மணிவரை விரதத்தை மேற்கொள்ளலாம். மாலை 6 மணிக்கு முருகப்பெருமானுக்கு பூஜை செய்து விரதத்தை முடித்து விட்டு உணவு அருந்தலாம். வெறும் வயிற்றோடு விரதமிருக்க முடியாதவர்கள், வெறும் பால் பழம் மட்டும் குடித்து விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அதுவும் முடியாதவர்கள் மூன்றுவேளை சாப்பிட்டு முருகப்பெருமானை வழிபாடு செய்தாலும், அதில் எந்த ஒரு தவறும் இல்லை.
கிருத்திகை தினத்தன்று, கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் இப்படிப்பட்ட பாடல்களை ஒலிக்கச் செய்து உங்களது காதுகளில் கேட்பது புண்ணியத்தை தேடித்தரும். நீங்கள் குறிப்பாக திருமணமாகாதவர்களாக இருந்தால், திருப்புகழில் சொல்லப்பட்டிருக்கும் இந்த பாடலை முருகப் பெருமானை நினைத்து, மனமுருகி ஒரே ஒரு முறையாவது உங்களது வாயால் உச்சரிக்கவேண்டும். கட்டாயம் அடுத்த ஆடிக்கிருத்திகைக்குள் உங்கள் வீட்டில் கெட்டி மேள சத்தம் கேட்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
உங்களுக்கு வேலையில் முன்னேற்றம் வேண்டும். தொழில் முன்னேற்றம் வேண்டும். குழந்தைகளுக்கு படிப்பில் முன்னேற்றம். கடன் பிரச்சனை தீர வேண்டும். அதிகப்படியான வருமானம் கிடைக்க வேண்டும். மன உறுதி அதிகரிக்க வேண்டும். என்ற எந்த வேண்டுதலாக இருந்தாலும் சரி, அந்த வேண்டுதலை ஆனி கிருத்திகை நட்சத்திரத்தன்று வைப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது.