எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆகும் போது நாட்டை முழுமையாகத் திறக்கக்கூடியதாக இருக்கும். அதுவரைக்கும் கொரோனாவைத் தடுப்பதற்கான கட்டுப்பாடுகள் தொடரும்.
என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.
99ஆவது சர்வதேச கூட்டுறவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற விசேட நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
உலகளவில் பரவியுள்ள கொரோனா நோயைத் தடுப்பதற்கு தடுப்பூசிகளே தீர்வாக உள்ளன. மகிழ்ச்சியடையும் வகையில் இலங்கைக்கு இந்த மாதத்தில் 90 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கவுள்ளன.
அவற்றை மக்களுக்கு செலுத்துவதன் மூலம் நாட்டை செப்டம்பர் மாதம் முழுமையாகத் திறக்க முடியும். நாட்டைத் திறக்காவிட்டால் பொருளாதாரத்தை நடத்திச் செல்ல முடியாது.
விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் சலுகைகளை வழங்கும் விரிவான திட்டமொன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் – என்றார்.