நாட்டில் நேற்றைய நாளில் 35,661 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
20,506 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், 15,155 பேருக்கு சைனோபாம் இரண்டாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் இதுவரையில், 19 இலட்சத்து 31 ஆயிரத்து 714 பேருக்கு சைனோபாம் முதலாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், 851,969 பேருக்கு சைனோபாம் இரண்டாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.