நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவான ‘வாழ்’ திரைப்படம் டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.
‘அருவி’ என்ற படத்தை இயக்கி தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘வாழ்’.
இதில் புதுமுகங்கள் ஆரவ், டி ஜே பானு, திவா தவான், பிரதீப்குமார், நித்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். செல்லி கலிஸ்ட் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, பிரதீப்குமார் இசையமைத்திருக்கிறார்.
‘கனா’, ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த ‘வாழ்’ திரைப்படம், இம்மாதம் 16 ஆம் திகதியன்று சோனி லிவ் என்ற டிஜிட்டல் தளத்தில் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து இந்த படத்திற்காக தேனிசைத் தென்றல் தேவா பாடிய பாடல் ஒன்று, இன்று வெளியிடப்படுகிறது. இதனை சிவகார்த்திகேயனின் ரசிகர்களும், இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் ரசிகர்களும் இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
சோனி லிவ் என்ற புதிய டிஜிட்டல் தளம் அண்மையில் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி, ‘தேன்’ என்ற விருதுபெற்ற திரைப்படத்தை ஒளிபரப்பி, இணைய ரசிகர்களின் வரவேற்பை பெற்றிருக்கிறது. அதில் ஜுலை 16ஆம் திகதியன்று ஒளிபரப்பாகும் ‘வாழ்’ திரைப்படம், எதிர்பார்ப்பை விட கூடுதலாக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது