கொரோனா தொற்று காரணமாக நோர்வூட் நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நோர்வூட் நகர் பகுதியில் இன்றைய தினம் 12 பேருக்கு கொவிட் தொற்றுஉறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து நோர்வூட் நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம், சமுர்த்தி வங்கி, மதுபானசாலை ஆகியவற்றை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மஸ்கெலியா சுகாதார வைத்திய அதிகாரி துறைசாமிபிள்ளை சந்திரராஜன் தெரிவித்தார்.