யூலை முதலாம் 1 திகதி கனடா 147 வது தினத்தை கொண்டாடுகிறது.கனடா நாள் (Canada Day, பிரெஞ்சு: Fête du Canada) என்பது கனடாவின் தேசிய நாளும், பொது விடுமுறை நாளும் ஆகும்.
1867 ஆம் ஆண்டு சூலை 1 ஆம் நாளில் மூன்று முன்னாள் பிரித்தானியக் குடியிருப்புகளை இணைத்து பிரித்தானியப் பேரரசுக்குள் கனடா என்ற ஒரு நாடாக ஆக்கும் “பிரித்தானிய வட அமெரிக்க சட்டம்” கொண்டுவரப்பட்டதை நினைவு கூரும் முகமாக ஆண்டுதோறும் சூலை 1 ஆம் நாள் கனடா நாளாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நாள் முன்னர் டொமினியன் நாள் என அழைக்கப்பட்டது, பின்னர் 1982 ஆம் ஆண்டு கனடா சட்டம் கொண்டுவரப்பட்டதை அடுத்து பெயர் மாற்றப்பட்டது. கனடா நாள் கனடா முழுவதிலும், மற்றும் உலக நாடுகளில் உள்ள கனடியர்களாலும் கொண்டாடப்படுகிறது.
சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் மக்கள் கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற நிலையில், கனடா தேசிய கீதம் தமிழிலும் உருவாக்கப்பட்டமை ஈழத் தமிழ் மக்களுக்கு கிடைத்த பெரும் கௌரவம் ஆகும்.
அத்துடன் கனடாவில் அரசியல் பதவிகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் பல ஈழத் தமிழர்கள் முக்கிய பதவிகளை வகிப்பதுடன் கனடா ஈழத் தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
ஈசி24நியூசும் இனிய கனடா தின வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்கிறது!