ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஒருவருக்கு டெல்டா பிளஸ் தொற்று ஏற்பட்டு குணமடைந்ததாக ஆந்திர மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா 2-வது அலை நாட்டில் குறைய தொடங்கியுள்ள இந்த சமயத்தில் புதிதாக டெல்டா பிளஸ் தொற்று மெல்ல பரவி நாட்டு மக்களை அச்சுறுத்தி வருகிறது.
நாடு முழுவதும் இந்த டெல்டா பிளஸ் வைரசால் 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் முதல் தொற்று திருப்பதியில் பதிவாகியுள்ளதாக அமராவதியில் ஆந்திர மாநில சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் ஆள்ள நானி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதையும் படியுங்கள்… சென்னை, காஞ்சிபுரம், மதுரையில் டெல்டா பிளஸ் கொரோனா – மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை
டெல்டா பிளஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் திருப்பதியில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளார். இது மாநிலத்தில் பரவிய முதல் தொற்றாகும்.
இதனால் அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, தொடர்ந்து தொற்று பரவாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.