முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் விடுதலை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை விசனம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் ஐ.நா. மனித உரிமை சபை தனது டுவிட்டர் பக்கத்தில்,
சக அரசியல்வாதியின் கொலைக்கு தண்டனை பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கான ஜனாதிபதி மன்னிப்பு விடுதலையானது, தேர்ந்தெடுக்கப்பட்ட, தன்னிச்சையாக மன்னிப்பு வழங்குவதற்கான மற்றொரு எடுத்துக்காட்டு ஆகும்.
இது சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்துவதுடன், பொறுப்புக்கூறலையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று பதிவிட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா சிறப்பு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் நேற்று சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.