நாட்டில் இன்று ஊவா மாகாணத்தின் ஒரு சில இடங்களிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் மாலை வேளைகளில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல் மற்றும் மேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில நேரங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்கொழும்பிலிருந்து கொழும்பு மற்றும் காலி வழியாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பகுதிகளில் காற்று மேல் நோக்கி வீசும்.
அதேவேளை தீவைச் சுற்றியுள்ள பிற கடல் பகுதிகளில் தெற்கு நோக்கி காற்று வீசும். காற்றின் வேகம் (30-40) கிலோமீற்றர் வேகத்தில் வீசும்.
காலி முதல் பொத்துவில் வரை ஹம்பாந்தோட்டை வழியாகவும், புத்தளம் முதல் மன்னார் வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் அலையின் வேகம் அதிகரித்து காணப்படும்.
எனவே பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.