ஈரான் நாட்டில் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசி இவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை சந்திக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி ஹசன் ரோஹானி ஜனாதிபதி பதவியிலிருந்து வரும் ஆகஸ்ட் மாதம் விலக உள்ள நிலையில் 60 வயதான இப்ராஹிம் ரைசி இஸ்லாமிய குடியரசு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.
ஈரான் அணுவாயுத சோதனைக்கு பல ஆண்டு காலமாக அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதுகுறித்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தப்படும் நிலையில், புதிதாக ஈரான் ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ள இப்ராஹிம் ரைசி, இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தான் ஜோ பைடனுடன் ஆலோசிக்க விரும்பவில்லை என்றுள்ளார். இதனையடுத்து ரைசி அமெரிக்காவில் நுழைய பைடன் அரசு தடை விதிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை தடை விதிக்கப்படுமானால் அமெரிக்க அரசால் தடைவிதிக்கப்பட்ட முதல் ஈரான் ஜனாதிபதி என்கிற பெயரை ரைசி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.