நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட பின்னர் மக்களின் செயற்பாடுகள் மிகவும் கவலைக்குரிய விதத்தில் காணப்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.
சுமார் ஒரு மாதக் காலத்திற்கு பின்னர் இன்று (21) நடமாட்டக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்ட போதும், மக்கள் பொது இடங்களில் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாது நடந்து கொண்டதை காணக்கூடியதாக இருந்தது.
எதிர்வரும் நாட்களிலும் மக்கள் இவ்வாறு பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால், பெரும் ஆபத்தான நிலைக்கு முகங்கொடுக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் பரவும் டெல்டா திரிபு இலங்கையிலும் அடையாளம் காணப்பட்டதை நினைவில் வைத்து செயற்படுமாறு அவர் மேலும் தெரிவித்தார்.